மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறா’ ஓடிடியில்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாறா' படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் பாடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரித்துள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் இன்னும் கரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தால், திரையரங்குகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும்…

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை

பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். அவரது வாழ்க்கை தமிழில் ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தி, கன்னட பட உலகில் போதை பொருட்கள் பயன்படுத்தும் குற்றச்சாட்டுகள் எழுந்து நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் போதை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது இல்லாமல் பார்ட்டிகளே இல்லை.…

விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

தீபாவளி பண்டிகையில் விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்? கொரோனா பரவலால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படமும் அடுத்த மாதம் 2-ந்தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விஷால் அளித்துள்ள பேட்டியில், “சக்ரா படத்தை ஓ.டி.டி.யில்…

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர். இந்நிலையில், நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லேசான அறிகுறியுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு ஜெயாபச்சனுக்கு கங்கனா பதிலடி

இந்தி பட உலகில் போதை பொருள் புழங்குவதாக நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கண்டித்தார். அமிதாப்பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயாபச்சனும் கங்கனாவை மறைமுகமாக கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “ஒரு சிலருடைய தவறுக்காக ஒட்டுமொத்தமாக இந்தி திரையுலகின் பெயரை கெடுக்க கூடாது. திரைத்துறைதான் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது” என்றார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் கங்கனா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயாபச்சன் அவர்களே எந்த வாய்ப்பை பற்றி குறிப்பிட்டு சொல்கிறீர்கள்? கதாநாயகனுடன் படுக்கையை பகிர்ந்த பிறகு இரண்டு நிமிடங்கள் நடிக்கவும் ஒரு பாடல் காட்சியில் காதல் செய்யவும் தருவதாக சொல்லும் வாய்ப்பை பற்றி பேசுகிறீர்களா? கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திரைப்படத்துறைக்கு பெண்ணியத்தை நான்தான் கற்றுக்கொடுத்து இருக்கிறேன். நீங்கள்…

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ´பகிடிவதை´ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய இம்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நான்கு சிரேஸ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களைப் பாலியல் ரீதியாக இம்சிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட "சைபர் ராக்கிங்" தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (18) காலை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, துணைவேந்தருடன், வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன், சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எஸ். ராஜ்உமேஸ், மாணவர் நலச்சேவைகள்…