மரணத்தை கொலையாக்கியதாக விஜயகலாவுக்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (17) முற்பகல் 10.00 மணிக்கு அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டபோது, அவர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்று குளத்தில் குதித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில், குறித்த நபரின் மரணமானது இயற்கை மரணம் என்று நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Related posts