ரூ.2 கோடி சம்பளம் கேட்கும் சாய்பல்லவி

மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. மலையாளத்தில் பிரேமம் வெற்றி படத்தில் நடித்து பிரபலமான சாய்பல்லவிக்கு தமிழ், தெலு ங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. சூர்யாவுடன் என்.ஜி. கே. தனுசுடன் மாரி 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் நக்சலைட் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் முடங்கிய லவ் ஸ்டோரி படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அடுத்து நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியை அணுகி உள்ளனர். அதில் நடிக்க சாய்பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.…

விஜய்சேதுபதியின் 2 படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலால் தியேட்டர்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய படங்கள் திரையரங்குகளுக்கு பதிலாக இணையதளமான ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் படம் அடுத்த மாதம் 2-ந்தேதி ஜிபிளக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2…

மரணத்தை கொலையாக்கியதாக விஜயகலாவுக்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (17) முற்பகல் 10.00 மணிக்கு அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கநகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டபோது, அவர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்று குளத்தில் குதித்துள்ளார். இது தொடர்பான வழக்கில், குறித்த நபரின் மரணமானது இயற்கை மரணம் என்று நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய தலைவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. லாடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மோதலையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வந்த 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், ராணுவ தலைவர்கள், நிறுவனங்களை சீனா உளவு பார்ப்பதாக பல நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதும் இதில் 10 ஆயிரம் இந்தியர்கள் இலக்காக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்தி நாளிதழான ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய கள ஆய்வில் சீனாவை சேர்ந்த சேன்ஹூனா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி,…