எம்.கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு

தடையை மீறி திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு உள்ளார்.

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு மறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று (15) பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திலீபனின் நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார்.

இதனால் கோப்பாய் பொலிஸாரால் இவர் நேற்று (15) கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று (16) நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts