நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நீதியமைச்சர் அதிருப்தி

கடந்த அரசாங்கம் தனிப்பட்ட முறையிலேயே சட்டங்களையும், விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
´இரட்டை குடியுரிமை பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் இரட்டை குடியுரிமைக் கொண்டோர் அதிகாரத்திற்கு வர முடியாது என்ற ஒன்றை கொண்டு வந்தது. அது நல்ல நோக்கில் கொண்டுவரப்படவில்லை.

19 ஆம் திருத்தத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என்ற திருத்தத்தை கொண்டு வந்தனர். அத்துடன் நாமல் தேர்தலில் போட்டியிடுவார் என்ற பயத்தில் தேர்தலில் போட்டியிடும் வயதை 30 இல் இருந்து 35 வரை மாற்றினர். அவை அனைத்தும் தமது தனிப்பட்ட விருப்பத்திற்காக கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் அரசியல் யாப்பு மீறப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

இலங்கையின் குடியுரிமை அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ´நீங்கள் பிறப்பால் இலங்கையராக இருந்தால் அல்லது பதிவின் ஊடாக இலங்கையராக இருந்தாலும் உங்கள் உரிமைகளில் எந்த வித்தியாசமும் இல்லை´ என அமைச்சர் கூறினார்.

சட்டத்திற்கமைய நீங்கள் இரட்டை குடியுரிமையை கொண்டிருப்பவரா? அல்லது ஒற்றை குடியுரிமையை கொண்டிருப்பவரா என்பதில் பிரச்சினையில்லை. இருபாலாருக்கும் இலங்கை அரசியல் யாப்புக்கமைய நாட்டில் அனைத்து வகை உரிமைகளும் உள்ளன என நீதியமைச்சர் மேலும் கூறினார்.

Related posts