அதிரடி நாயகனாக ஆசை !?

வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால். ‘ராட்சதன்’ படத்தின் மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார். அந்த படத்தின் வெற்றி, விஷ்ணு விஷாலின் ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயரே தூக்கிப் பிடித்தது.

பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் வந்து இருக்கிறது. ஒரு அடிதடி படத்தில் நடிப்பதற்காக ‘6 பேக்’ உடற்கட்டுக்கு மாறியிருக்கிறார்.

இதுபற்றி விஷ்ணு விஷால் கூறுகையில், “எல்லா கதாநாயகர்களும் காரை விட்டு இறங்கியதும், தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிரடி கதாநாயகனாக வேண்டும் என்று விரும்புவார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் வர்த்தக ரீதியிலான அடிதடி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வரும். அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்” என்கிறார்.

Related posts