ஓடிடி தளங்களின் வருகை இரு முனை கத்தி போல

ஓடிடி தளங்களின் வருகை இரு முனை கத்தி போல என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். சார்ஸ் இயக்கத்தில் வைபவ், வெங்கட்பிரபு, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாக்கப்'. நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்க வெளியீடாகவே இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் தற்போது ஜீ 5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் 'லாக்கப்' படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் வெங்கட்பிரபு. அதில் ஓடிடி தளங்களில் வருகை, அதில் படங்கள் வெளியீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது: "ஓடிடி தளங்களின் வருகையில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது, அது இரு முனை கத்தி போல. 'லாக்கப்' போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவிகரமாக இருந்தாலும், இன்னொரு…

அதிரடி நாயகனாக ஆசை !?

வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால். ‘ராட்சதன்’ படத்தின் மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார். அந்த படத்தின் வெற்றி, விஷ்ணு விஷாலின் ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயரே தூக்கிப் பிடித்தது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் வந்து இருக்கிறது. ஒரு அடிதடி படத்தில் நடிப்பதற்காக ‘6 பேக்’ உடற்கட்டுக்கு மாறியிருக்கிறார். இதுபற்றி விஷ்ணு விஷால் கூறுகையில், “எல்லா கதாநாயகர்களும் காரை விட்டு இறங்கியதும், தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிரடி கதாநாயகனாக வேண்டும் என்று விரும்புவார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் வர்த்தக ரீதியிலான அடிதடி…

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ் அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். இடம்பெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பின்னடைவைக் கண்டுள்ளது. அதேவேளை எமது கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். இதற்கான பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. எது எப்படியிருந்தபோதும் எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன்.…