விக்ரமின் சிக்ஸ்பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சிக்ஸ்பேக்குடன் விக்ரம் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதில் 'கோப்ரா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. கோப்ரா' படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தின் போஸ்டரில் இருந்த கெட்டப்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் விக்ரம் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சமீபத்தில் விக்ரமின் மகளுக்குக் குழந்தை பிறந்துள்ளது. பலரும் விக்ரமுக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தார்கள். இதனிடையே, தற்போது விக்ரம் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

225 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து: பில்கேட்ஸ்

இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் கரோனா தடுப்பு மருந்துகளை ரூ.225-க்கு (3 அமெரிக்க டாலர்) வழங்க முடியும். இதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், கரோனா தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனை 2-வது மற்றும் 3-வது கட்ட ப் பரிசோதனைகயை விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளில் நடந்த கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்துகள் நல்ல…

நடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசிய மீரா மிதுன் ..!

“நடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே... துணை நடிகை மற்றும் மாடல் என்று சொல்லப்படும் மீரா மிதுன் என்பவர் நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியார் பற்றியும் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளார். அவரை வன்மையாக கண்டிப்பதுடன், புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். மீரா மிதுன் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். விஜய் பற்றியும், அவருடைய மனைவி பற்றியும் மீரா மிதுன்…

வீடு திரும்பினார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள். நேற்று அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் செய்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் இன்று பிற்பகல் நான் கொரோனா பரிசோதனையில் என தெரியவந்தது. இதை…

ஐ.நா. உட்பட எந்தவொரு நாட்டுக்கும் அடிப்பணியாது – பீரிஸ்

சௌபாக்கியத்தின் நோக்கு’ என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகத்தான வெற்றியை நாட்டு மக்கள் வழங்கியுள்ளதால் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படமாட்டாது. அதற்கான தேவையும் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையாகவுள்ள அனைத்துக் காரணிகளும் திருத்தியமைக்கப்படும் என்பதுடன் பாராளுமன்றில் வலுவான ஓர் எதிர்க்கட்சி இல்லாமையால் பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோன்று ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும், அமைப்புக்கும் எமது அரசாங்கம் அடிப்பணிந்து செயற்பட மாட்டாதென்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மகத்தான வெற்றியை நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய…

ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை பாராட்டி எழுதியுள்ளன.

பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து எழுதியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமோக வெற்றியை நோக்கி வழிநடத்தியுள்ளார்கள் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய நியுயோர்க் ரைம்சின் மரியா அல் அப் என்ற கட்டுரையாளர், இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையை பொதுத் தேர்தலில் மக்கள் அங்கீகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிபிசி, சி.என்.என், அல்-ஜசீரா, நியுயோர்க் ரைம்ஸ், வோஷிங்டன் போஸ்ட், பீப்பல்ஸ் டெய்லி, ரஷ்யா ருடே முதலான செய்தி நிறுவனங்களும் இலங்கையின் தேர்தல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் நியுஸ் எயிட்டீன் இணையத்தளம்…

ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (8) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில சிந்தனைகளை கொள்ள வேண்டும் என்பதிலே மக்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்கள் என்பது தான் என்னுடைய கருத்து. ஒற்றுமை இன்மை என்பது வெளிப்படையாக…