ரணிலும் அவரின் தோழர்களான தமிழரசும் வீழ்ச்சி தேர்தல்..!

ஒன்பதாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இறுதி தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்று அமொக வெற்றி பெற்றுள்ளது.

அந்த கட்சிக்கு அளிக்கப்பட்ட 11,598,929 மொத்த வாக்குகளில் 68,53,693 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

அதற்கமைய அந்த கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றியதுடன், அதில் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களும் உள்ளடக்கம்.

பொதுஜன பெரமுண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டே பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.

இந்த நிலையில் அந்த இலக்கை ஏனைய கட்சிகளின் ஆதரவோடு பொதுஜன பெரமுண நிலைநிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்துள்ள தோல்வியே ஆக்கிய இடம் பெறுகின்றது.

1946 ஆம் ஆண்டு உருவான அந்த கட்சி பொதுத் தேர்தல் ஒன்றில் அடைந்த படுதோல்வியாக இந்த முறை பொது தேர்தல் தோல்வி கருதப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் 2,49,435 வாக்குகள் மாத்திரமே கிடைத்துடன் இது மொத்த வீதத்தில் 2.15 வீதமாகும்.

அந்த கட்சிக்கு ஒரே ஒரு தேசியப்பட்டியில் பாராளுமன்ற ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது.

இது மொத்த வீதத்தில் 2.15 வீதமாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, அக்கில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் படுதோல்வியடைந்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க அதன் பின்னர் இடம்பெற்ற அனைத்து பொதுத் தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றிருந்தார்.

ஆனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

ஐ.தே.கவில் இருந்து பிரிந்து தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மொத்த முடிவுகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அந்த கட்சி 54 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 2,771,980 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அது 27.90 சதவீதமாகும்.

கடந்த பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களை கைப்பற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி இந்த முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

Related posts