அலைகள் வாராந்த பழமொழிகள் 07.08.2020

இம்முறை வியாபாரத்திற்கு தேவையான ப்ராண்டிங் பற்றிய வர்த்தக தொழில் ஆலோசனைகள் வருகின்றன. 01. வர்த்தகத்தில் வெற்றியடைய வேண்டுமா.. கண்டிப்பாக அதற்கு ஒரு ப்ராண்ட் வேண்டும், அதாவது வியாபார சின்னம். அப்போதுதான் நம்மை மற்றவரில் இருந்து வித்தியாசப்படுத்தலாம். 02. வாடிக்கையாளர் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் ப்ராண்ட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர் பாவிக்கும் ப்ராண்ட் அவர் பெருமையை பறைசாற்றும். 03. வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு அதன் ப்ராண்ட் காரணமாக உலகம் முழுவதும் பெரும் மதிப்புண்டு. அதன் வருமானத்தை பார்த்தால் உலகத்தின் நாலாவது நாடுபோல இருக்கும். வருடாந்த வருமானத்தை பார்த்தால் 157 நாடுகள் அதன் பின்னால்தான். 04. ஐ.போன் என்ற ப்ராண்ட் 2007 ல் வந்து, 120 வருட பழைய கொக்கோ கோலாவையும், 60 வருடங்கள் பழைய மக் டொனால்சையும் முந்தியது அதன் ப்ராண்டால்தான். 05. அமேசன் என்ற வர்த்தக அடையாளத்தின்…

தமிழ் சினிமாவை தோற்கடிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் புது வியூகம்..!

பாரதிராஜாவைச் சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டார்கள் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை பாரதிராஜா அறிக்கை மூலமாக உறுதிப்படுத்தினார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் இன்று (ஆகஸ்ட் 6) காலை ஒன்று கூடி…

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது

கொரோனா தொற்று பாதித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மராட்டியத்திற்கு அடுத்து தமிழகம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அவற்றில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோன்று திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. அதில், கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை மையத்தில் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலம் பெற…

நடிகர் சுஷாந்த் சிங் கொலை சிபிஐ வழக்குப்பதிவு

நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை…

வீடியோ போட்டு விட்டு நடிகை தூக்கு போட்டு தற்கொலை

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் அனுபமா பதக் (வயது 40). இவர் மும்பைக்கு வேலை தேடி சென்றுள்ளார். பின்னர் போஜ்புரி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதனால், மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முந்தின நாள் பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில் இந்தியில் பேசிய பதக், உங்களுக்கு ஏதேனும் சில பிரச்னைகள் உள்ளன மற்றும் தற்கொலை செய்ய போவது போன்று உணர்கிறேன் என யாரிடமேனும் கூறினால், அவர்கள் ஆணோ, பெண்ணோ எவ்வளவு நல்ல நண்பராக இருப்பினும், தங்களிடம் இருந்து விலகி இருங்கள் என கூறி விடுவார்கள். அதனால், யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். உங்களது பிரச்னைகளை பற்றி ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். என்னுடைய…

கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி

சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு ஒன்றில் சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட உடனேயே ஜாப்ரியைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகவும், எனினும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான ஜாப்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். அவர் அன்று முதல் கனடாவின் டொரான்டோவில் தனியார் பாதுகாப்பில் இருக்கிறார். டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது…

ரணிலும் அவரின் தோழர்களான தமிழரசும் வீழ்ச்சி தேர்தல்..!

ஒன்பதாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இறுதி தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன. பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்று அமொக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு அளிக்கப்பட்ட 11,598,929 மொத்த வாக்குகளில் 68,53,693 வாக்குகளை பெற்றுக் கொண்டது. அதற்கமைய அந்த கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றியதுடன், அதில் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களும் உள்ளடக்கம். பொதுஜன பெரமுண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டே பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த நிலையில் அந்த இலக்கை ஏனைய கட்சிகளின் ஆதரவோடு பொதுஜன பெரமுண நிலைநிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்துள்ள தோல்வியே ஆக்கிய இடம் பெறுகின்றது. 1946 ஆம் ஆண்டு உருவான அந்த கட்சி…