முடிவுக்கு வந்த மோதல்; பாரதிராஜா- பாலா சமரசம்

குற்றப் பரம்பரை' படத்தின் உருவாக்கத்தால் ஏற்பட்ட சண்டைகளால் பிரிந்த, பாரதிராஜாவும் பாலாவும் இப்போது சமரசமாகிவிட்டனர் என்று தெரியவந்துள்ளது. நேற்று (ஜூலை 17) இயக்குநர் பாரதிராஜா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினர். அதில் தேசிய விருது வென்ற பல திரையுலகினரின் பெயர் இருந்தது. அந்தப் பட்டியலில் இயக்குநர் பாலாவின் பெயரைப் பார்த்தபோது பலருக்கும் ஆச்சரியம்தான். ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'குற்றப் பரம்பரை' கதையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா - பாலா இருவருமே தனித்தனியாகப் படமெடுக்கத் திட்டமிட்டார்கள். இதனால் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. பாரதிராஜா அளித்த பேட்டிகள், பாலா பத்திரிகையாளர் சந்திப்பு என்று நடந்த சம்பவங்கள் அனைத்துமே பலருக்கும் தெரியும். இப்போது பாரதிராஜாவுக்கு தாதா சாகேப்…

ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் கசிந்த படம்

மலையாள பட உலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ் மலையாள பட உலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர், டொவினோ தாமஸ். இவர், ‘மாரி-2’ படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இதையடுத்து, ‘கிலோ மீட்டர் அண்ட் கிலோ மீட்டர்’ என்ற மலையாள படத்தை தயாரித்தார். இதில், அவர் நடித்தும் இருக்கிறார். படம், கடந்த மார்ச் மாதமே திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் ‘ஆன் லைனில்’ கசிந்துள்ளன. இது, டொவினோ தாமசுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே காட்சிகள் வெளியில் கசிந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகப்பணிகளில், ஒரு வில்லன் நடிகர்!

வில்லன் நடிகர் ரவிமரியா, தமிழக அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார். வில்லன் நடிகர் ரவிமரியா, தமிழக அரசு தயாரித்த கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:- “நான் நடிகர் மற்றும் டைரக்டர் என்றுதான் பலருக்கு தெரியும். ஆனால் அடிப்படையில் நான் சமூகப்பணி படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவன். சினிமாவுக்குள் வந்ததால், என் படிப்பை பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது. அதை ஈடுகட்டும் விதமாக ‘கொரோனா பற்றிய விளம்பர படத்தில் நடித்தேன். விமல், ஆதி, நட்டி, யோகிபாபு, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோரை கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசவைத்து, அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறேன். மருத்துவ விதிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து சமூகப்பணிகளில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு ரவி மரியா கூறினார்.

நடிகை ரம்யா நம்பீசனின் புதுமையான இணையதள தொடர்

ரம்யா நம்பீசன் பிரபலமான நடிகை என்பதும், சொந்த குரலில் இனிமையாக பாடும் திறன் மிகுந்த சிறந்த பாடகி என்பதும் தெரிந்த தகவல். அவர் இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருக்கிறார். டைரக்டர் பத்ரி வெங்கடேசுடன் இணைந்து, ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற பெயரில், புதுமையான இணையதள தொடரை தொடங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு, ‘சூரிய அஸ்தமன குறிப்பேடுகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபற்றி அவர் கூறியதாவது:- “நம்மை சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை பல்வேறு அன்றாட பணிகளுக்கு இடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம். இதை நம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த தொடர். இதை பார்ப்பவர்கள் தங்களை அடையாளப்படுத்தி புதுப்பித்துக் கொள்வார்கள். என்னுடைய ‘யூடியூப்’ சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து தருவேன்.” இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனா பாதிப்பில் பலி

கன்னட திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் கொரோனா பாதிப்பில் பலியானார். கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர் (வயது 70). இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள், 150க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது. அவர், பிரேம லோகா என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் இருந்தபொழுது, 2வது நாளில் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இதனை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். எனினும், அவருக்கு சுவாச கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் காலமானார். அவருக்கு 3 மகள்கள் மற்றும்…

கொரோனா மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு : ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. இந்தியாவில் மராட்டியம், டெல்லி, தமிழகம், கர்நாடக போன்ற மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, கொரோனா பாதிப்பால் எற்படும் மரணத்தை மத்திய அரசு மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 29

எல்லாச் சூழ்நிலையிலும் உதவும் நல்ல தேவன். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை. லூக்கா 7:7. இன்றைய தியானத்தை நன்றாக விளங்கிக்கொள்ள லூக்கா7:1-10 வரை வாசித்துப் பார்க்கவும். ஒரு இராணுவ உயர் அதிகாரின் இராணுவவீரன் கடும்நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனையுடன் காணப்பட்டான். அந்த வேதனையை உயர் அதிகாரியால் பொறுக்க முடியவில்லை. அவன் ஆலய மூப்பரை அணுகி, இயேசு மூலம் குணமடைய உதவி செய்யும்படியாக வேண்டிக் கொண்டான். நாம் இங்கு கவனிக்க வேண்டியது, அவனுக்கு வைத்தியம்செய்ய பலசிறந்த வைத்தியர்கள் இருந்திருப்பார்கள் என்பதை. ஆனால் அவனோ இயேசுவை நாடினான். அவரல்ல அவரின் வார்த்தையே போதுமென்று நம்பினான். இயேசுவிற்குமுன் தான் ஒரு தூசி என்று தன்னைத் தாழ்த்தினான். இதை நாம் வசனம் 7-8 இல் காணலாம். அப்பொழுது இயேசு…