எந்த டைரக்டரிடமும் அஜித் கதை கேட்கவில்லை!

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் அவர் எந்த டைரக்டரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அஜித்குமார் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருடைய அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் நடித்த ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவாதான் அடுத்த படத்தின் டைரக்டர் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. அவர், அஜித்திடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக பேசப்பட்டது. விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், அஜித்தை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக இன்னொரு தகவல் பரவியது. இரண்டு தகவல்களுமே வதந்தி என்பது விசாரித்ததில் தெரியவந்தது. “அஜித் எப்போதுமே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு கதை கேட்பார். சமீபத்தில் அவர் எந்த டைரக்டரிடமும் கதை கேட்கவில்லை” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்?

மணிரத்னம் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜய் தான். அவருடன் இணைந்து நடிக்க தேர்வு செய்யப்பட்ட நாயகன், மகேஷ்பாபு. இருவருமே ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க மறுத்து விட்டார்கள். விஜய்யிடம், மணிரத்னம் ஒரு வருடம் தேதிகள் கேட்டதாகவும், அவ்வளவு தேதிகள் கொடுக்க முடியாது என்று கூறி, விஜய் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. “நான் இப்போது வேறு ஒரு ‘ரூட்’டில் போய்க்கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு சவுகரியமாக இருக்கிறது” என்றும் அவர் சொன்னதாக பேசப்படுகிறது. “இரண்டாவது கதாநாயகனாக நடிக்க முடியாது” என்று கூறி, மகேஷ்பாபு நடிக்க மறுத்து விட்டாராம். மகேஷ்பாபு ஒரு படத்துக்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும், மணிரத்னம் படக்குழுவினர் அந்த சம்பளத்தை விட…

‘சூரரை போற்று’ சூர்யா படம் ரூ.55 கோடிக்கு வியாபாரம்

சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படம் ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘சூரரை போற்று.’ அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். இது, ஒரு வரலாற்று கதை. உண்மை சம்பவங்கள் திரைக்கதையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூர்யா நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தின் தயாரிப்பு செலவு ரூ.30 கோடி என்றும், அதன் தமிழ்நாட்டு உரிமை மட்டும் ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆந்திரா, கேரளா மற்றும் டி.வி. உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இந்த படம், ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று முதலில்…

சினிமா தியேட்டர்கள் திறப்பது எப்போது?

சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு ஆர்.கே.செல்வமணி பதிலளித்துள்ளார். கொரோனா நோய் பரவுவதை தவிர்க்க ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. சினிமா மற்றும் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த 3 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதேபோல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சில தொலைக்காட்சிகளில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களின் காட்சிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள். இந்தநிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த மாதம் 8-ந் தேதி முதல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஒரே வாரத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் மறுபடியும் நிறுத்தப்பட்டன. வருகிற 8-ந் தேதி முதல் மீண்டும் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…

இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்

இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட பரிசோதனைக்கும் ஏற்பாடு ஆகிறது. ஆகஸ்டு 15, ஆங்கிலேயரிடம் இருந்து மட்டுமல்ல, கொலைகார கொரோனா வைரசிடமிருதும் விடுதலை பெறுகிற ஒரு நாளாக மாறப்போகிறது. இந்த நம்பிக்கையை நமக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தந்துள்ளது. உலக நாடுகளில், அதுவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரேசில் போன்ற வளர்ந்த நாடுகளைக்காட்டிலும் இந்தியாதான் தடுப்பூசி துறையில் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பது கொரோனாவிலும் நிரூபணம் ஆகப்போகிறது. அந்த வகையில் நமது நாட்டிலேயே நம்பகமான ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘கோவேக்சின்’ என்று அழைக்கப்படுகிற இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனமும், இந்திய மருத்துவ…

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஊரடங்கு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கையொட்டி சென்னையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை போலீசார்…