ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் CID

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுதவற்காக, அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார்.

——-

யாழ். மண்டைதீவுக் கடலில் வீசப்பட்ட நிலையில், 426 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசி விட்டு படகில் தப்பித்துள்ளனர் என, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, படகு ஒன்றிலிருந்து பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்துள்ளனர்.

அப்படகைச் பின்தொடர்ந்து சென்றபோது, அதில் பயணித்தவர்கள் தப்பித்து விட்டனர். குறித்த பொதிகளை மீட்டு ஆராய்ந்தபோது, அவற்றில் கஞ்சா போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts