தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினார். மேலும் காரைக்காலில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

சாத்தான்குளம் சிறையில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்று, மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts