இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 380 பேர் உயிரிழந்து உள்ளனர் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

——

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. மராட்டியத்தில் இதுவரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 761 ஆக உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்துவரும் போலீசார்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,887 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,015 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts