கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி!

கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்

விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,’ ‘ஜுங்கா’ ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படத்தையும் டைரக்டு செய்தவர், கோகுல்.

இவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘கொரோனா குமார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கே.சதீஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ஒரு பெண்ணின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ‘ஹெலன்’ என்ற மலையாள படத்தை வாங்கி தமிழில், ‘ரீமேக்‘ செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இது முடிவடைந்ததும், ‘கொரோனா குமார்’ படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.

Related posts