கறுப்பினத்தவர் கொலையை கண்டித்து வைரமுத்து கவிதை

எல்லா மனிதரும் ஒரே தரம் என்னும் வரிகளில், கறுப்பினத்தவர் கொலையை கண்டித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை வெள்ளை போலீஸ் அதிகாரி கால்மூட்டை வைத்து அழுத்தி கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையுண்ட இளைஞர் கடைசியாக சொன்ன என்னால் சுவாசிக்க முடியவில்லை என்ற வார்த்தைகள் அனைவரையும் உலுக்கியது. இதையடுத்து நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு ஆதரவாகவும் நிறவெறிக்கு எதிராகவும் கவிஞர் வைரமுத்து ஒரு பாடலை எழுதி உள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ் மணி இசையமைத்துள்ளார். பாடலில் வைரமுத்து எழுதியுள்ள வரிகள் வருமாறு:-

“காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை. என் காற்றின் கழுத்தில் யார் கால் வைத்து அழுத்துவது, சுவாசக்குழாயில் யார் சுவர் ஒன்றை எழுப்புவது, காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளைஎன்னால் மூச்சுவிட முடியவில்லை. எத்தனை காலம் விலங்குகள் இறுகும்? எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்? ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா? தோலைப் பார்த்துக் காற்று வீசுமா? காக்கையும் உயிரினம் கருமையும் ஒரு நிறம் எல்லா மனிதரும் ஒரே தரம் எண்ணிப்பாரு ஒரு தரம். மாளிகை நிறத்தை மாற்றுங்கள்ஒரு பாதியில் கறுப்பை தீட்டுங்கள். நீங்கள் பகல் நாங்கள் இரவு, இரண்டும் இல்லையேல் காலமே இல்லை. காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளைஎன்னால் மூச்சு விட முடியவில்லை”

இவ்வாறு வைரமுத்து எழுதி உள்ளார்.

Related posts