யாரும் அணுகவில்லை; போலி செய்தி: சிம்ரன் காட்டம்

சந்திரமுகி 2' படத்துக்காக தன்னை யாரும் அணுகவில்லை எனவும், அது போலி செய்தி என்று சிம்ரன் தெரிவித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. தற்போது 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகம் உறுதியாகியுள்ளது. தற்போது 'சந்திரமுகி 2' உறுதியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் "'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நான் இல்லை என நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு தகவலுமே இல்லை. அந்தப் படத்துக்காக இதுவரை யாருமே கேட்கவும் இல்லை" என்று தெரிவித்தார் ஜோதிகா. அப்போது 'சந்திரமுகி…

மன்னிப்பு கேட்ட மனோபாலா

நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர்…

போராட்டங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் – ஒபாமா

போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல்…

இலங்கையின் மூன்று முக்கிய செய்திகள்..!

நெலுவ பகுதியில் உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கரும் சிறுத்தை அல்ல எனத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர், நெலுவ பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்த வலையில் சிக்கி இச்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் அறிந்த குறித்த பகுதிக்குரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த இச்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. அண்மையில் இவ்வாறான 03 அரிய வகை சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். —– லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல்…