ஜெயலலிதாவாக நடிக்க தகுதி இல்லாதவர் கங்கனா !

தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தை கடுமையாக சாடி உள்ளார். விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கத்தை கங்கனா கண்டித்து இருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. வாரிசு நடிகைகள் கங்கனாவை சாடினர். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் தகுதி இல்லாதவர் என்று மீரா மிதுன் கூறியுள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில், “சுஷாந்த் சிங் மரணமடைந்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் தேவை இல்லாமல் கருத்து…

சாத்தான்குளம் இந்திப்பட நட்சத்திரங்கள் கடும் கண்டனம்

சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிராக இந்திப்பட நடிகர்-நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது. நடிகை பிரியங்கா சோப்ரா:- சம்பவத்தை கேள்விப்பட்டு நான் அதிர்ச்சியும், கவலையும், கோபமும் அடைந்தேன். குற்றம் எதுவாக இருந்தாலும், எந்த மனிதரிடமும் இத்தகைய மிருகத்தனத்தை காட்டக்கூடாது. தவறு செய்த போலீசார், தண்டனையில் இருந்து தப்பிக்கக்கூடாது. பலியானவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு வலிமை கிடைக்கட்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க கூட்டாக குரல் கொடுப்போம். நடிகை கரீனா கபூர்:- எந்த சூழ்நிலையிலும் இத்தகைய மிருகத்தனத்தை அனுமதிக்க முடியாது. நீதி கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து பேச வேண்டும். மீண்டும் இதுபோல் நடக்காதவாறு பாடுபட வேண்டும். நடிகை டாப்சி:-…

மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்

மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார். கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் நேற்று பீட்டர் பால் என்பவரை மணமுடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த முதல்நாளன்றே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தன் கணவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். எலிசபெத் ஹெலனின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக வனிதா தெரிவித்திருக்கும் நிலையில், அவரது திருமணம் குறித்த விமர்சனங்கள் சமூகவலைதளத்தில்…

மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று

மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தசூழலில் மதுரையிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 2,302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 250 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,552 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மதுரையில் 29 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதுவரை 609…

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்திய தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரின் பங்குச்சந்தை அலுவலகத்தில் நேற்று காரில் வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸார், பொதுமக்கள் என 7 பேர் பலியானார்கள். பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கராச்சியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் சிலீப்பர் செல்கள்தான் இந்தத் தாக்குதலைச்செய்துள்ளார்கள் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்மூத் குரேஷி குற்றஞ்சாட்டினார். இதற்கு இந்தியத் தரப்பில் பாகிஸ்தானுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று அளித்த…