தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 618 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 12,762 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 13,380 ஆக அதிகரித்துள்ளது. 874 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 70.70 சதவீதத் தொற்று சென்னையில் (618) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 20,246 -ல் சென்னையில் மட்டும் 13,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.06 சதவீதம் ஆகும். மொத்த எண்ணிக்கையில் 154 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .76% என்கிற அளவில் உள்ளது. 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.87 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்

இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என சீனா பதில் அளித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், "பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில், சீன…

மீட்கப்பட்ட கரும் சிறுத்தை உயிரிழப்பு

நல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29) காலை உயிரிழந்துள்ளது. உடவளவ மிருக வைத்தியசாலையில் குறித்த கரும் சிறுத்தை உயிரிழந்துள்ளதாக, நல்லதண்ணி வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். கம்பி வலையில் சிக்கிய குறித்த கரும் சிறுத்தை காயங்களுடன் மீட்கப்பட்டு, உடவளவ மிருக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளது. இக்கரும் சிறுத்தையினமானது அரிய வகை சிறுத்தை இனமாகும். அத்துடன், இக்கரும் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் விஞ்ஞானப் பெயர் : Panthera pardus kotiya கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி மரமொன்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையொன்றும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் - செ.தி. பெருமாள்)

போருக்கான ஆயத்த நிலையில் இருங்கள் சீன அதிபர்

சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதோடு சீன அதிபரும் தற்போது இவ்வாறு கூறியுள்ளார். தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப்…

அற்புதமான மனிதர் விவேக் வடிவேலுவின் ரசிகன் !

விவேக் அற்புதமான மனிதர் என்றும், தான் வடிவேலுவின் ரசிகன் என்று மாதவன் தெரிவித்துள்ளார். 'அலைபாயுதே' படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என வளர்ந்தவர் நடிகர் மாதவன். தற்போது 'ராக்கெட்ரி' என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். 'மின்னலே', 'டும் டும் டும்' உள்ளிட்ட சில படங்களில் விவேக்குடனும், 'ரெண்டு' படத்தில் வடிவேலு உடனும் இணைந்து நடித்துள்ளார் மாதவன். இருவரும் இணைந்து நடித்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த நேரலை கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்டுள்ளார் மாதவன். அதில் அவர் கூறியிருப்பதாவது; "விவேக் - வடிவேலு இருவருடனும் நடித்துள்ளேன். வடிவேலு சாருடன் நடிக்கும் போது எனக்கு அவ்வளவாக தமிழ் வராது. நல்ல நடிக்குறப்பா என்று பாராட்டுவிட்டு, அவருடைய ஜோக்குகள் பற்றியெல்லாம் பேசிட்டு இருப்பார். நான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். 'தேவர் மகன்'…