சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் தங்கள் எல்லையில், அதிக சக்தி கொண்ட விமானம் தாங்கி போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இறக்கி வருகின்றன.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது.

லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது.

அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா விமான தளம் அமைத்துள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கண்டிப்பாக அமைதியை விரும்பவில்லை. இந்தியாவை சீண்டவே நினைக்கிறது என்கிறார்கள்.அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.

இதுபற்றி லடாக் தன்னாட்சி கவுன்சிலின் நிர்வாக கவுன்சிலர் கோங்சோக் ஸ்டாசின் கூறுகையில், பங்கோங் சோ பகுதியில் சீன வீரர்கள் எத்தனை பேர் ஊடுருவினார்கள் என்று சொல்வது கடினம் என்றும் போர் பிங்கர், கிரீன் டாப் பகுதிகளில் அவர்கள் முகாமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. மேலும் அங்குள்ள விமானப்படை தளத்திலும் தனது போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், எத்தகைய போர்ச்சூழலுக்கும் தயாராக இருக்குமாறு ராணுவ வீரர்களை கேட்டுக் கொண்டார்.

எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதும், அந்த நாட்டின் அதிபர் இவ்வாறு பேசி இருப்பதும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமரச முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்த போதிலும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயாராகி வருகிறது. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது. ராணுவ தளபதிகளின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சீனாவின் இந்த சின்ன சின்ன மூவிற்கு எல்லாம் இந்தியா பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது.இந்தியா ஏற்கனவே சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

இந்தியா நேற்று தான் சி-451 எனப்படும் போர் கப்பல்களை இந்தியா களமிறக்கியது. இந்த கப்பல் தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை, மாறாக எதிர்பக்கம் விசாகப்பட்டினம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

கிழக்கு திசையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக போர் கப்பல்கள் இது ஆகும்.

அதேபோல் இன்னொரு பக்கம் சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை களமிறக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது.இதன் மூலம் எல்லையில் பாதுகாப்பு பணிகளை, ரோந்து பணிகளை செய்ய முடியும். அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை இராணுவம் களமிறக்கி உள்ளது.இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் இந்திய – சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும்.ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். பெரிய அளவில் படைகளை குவிக்க இப்படி செய்து வருகிறது.

அதேபோல் இன்னொரு பக்கம் விமானப்படையும் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தஞ்சாவூரில் இருக்கும் விமானப்படை தொடங்கி பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் எல்லையில் இருக்கும் படைகள் கூட தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் அடிக்கடி பல்வேறு இடங்களில் சோனிக் பூம் சத்தம் கேட்கிறது.

விமானப்படை பயிற்சிதான் இதற்கு காரணம் ஆகும். முக்கியமாக சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூட விமானங்களை இந்தியா சோதனை செய்து வருகிறது.இதனால்தான் இந்த சத்தம் கேட்கிறது. சீனாவின் விமானப்படை தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் இப்படி இந்தியா செயல்படுகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் படை வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related posts