ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இதேவேளை யாழ். ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.

Related posts