60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி

60 பணியாளர்களுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். பதிவு: மே 30, 2020 09:01 AM சென்னை அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழக அரசுவெளியிட்டு உள்ள அறிக்கையில் அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு…

தமிழீழ சைபர் போஸ் மீண்டும் ஊடுருவல்

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் மீது ‘தமிழீழ சைபர் படை’ எனும் குழு மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு www.pubad.gov.lk மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் www.slbfe.lk ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது இன்று (30) அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படையின் சைபர் பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையை மையமாக கொண்டு இயங்கும் 05 இணையத்தளங்கள் மீது கடந்த மே 18 ஆம் திகதி இக்குழுவினால் சைபர் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. யுத்த வெற்றி நினைவுதினமான மே 18ஆம் திகதியன்று, ஹிரு நியூஸ், சீனாவுக்கான இலங்கை தூதரகம் உள்ளிட்ட .lk மற்றும் .com டொமைன்களைக் கொண்ட 5 இணையத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஊடுருவப்பட்டிருந்ததாக, இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்திருந்தது. பின்னர் அவை வழமைக்கு கொண்டுவரப்பட்டன.…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 22

இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நீ பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன். ஏசாயா 41:10 அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்ட கொரோனா அழிவுகள் பற்றி அறிந்திருப் பீர்கள். வாழ்க்கை நிலையற்றதாகி விட்டது என்பதற்கு இவைகள் ஓர் சிறந்த உதாரணமாகும். வீட்டில் இருந்து புறப்பட்டால் திரும்பவீடு சேருவது நிச்சயமற்ற தாகி விட்டது. இன்று எல்லோருடைய வாயிலும் இதுதான் பேச்சு. உண்மையும் இதுதான். ஆனால் நமக்கு (தேவனை அறிந்த மக்களுக்கு) இது புதிதான விடையமல்ல. எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே, மனுசனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது. வெளியிலே புஸ்பத்தைப்போல பூக்கிறான். காற்று அதன்மேல் வீசிய வுடனே அது இல்லாமற் போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது என்று சங்கீதத்தில் (103:15-16) இல் எழுதப்பட்டுள்ளது. இவ்வுலக வாழ்வு நிலையானது அல்ல…

உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ, பி.பி.சிக்கு அளித்த செவ்வியில் இதனை கூறியுள்ளார். தனி ஒருவர் சமூகத்தில் நடமாடுவது அதிகரிப்பதால் வைரஸ் பரவல் விரைவில் அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பயணக் கட்டுப்பாடுகளை குறைத்திருந்தாலும் முடிந்தளவு சமூக இடைவெளியை பேணுவதி அத்தியாவசியம் எனவும் அவரர் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படின் அவர் உடனடியாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கொவிட் -19 தொற்று நோயின் வீரியம் குறைவடைந்து வருவதை கருத்தில் கொண்டு சில நாடுகள் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகiளை தளர்த்தியுள்ளன ஆனால் அந்த நாடுகளிலிருந்து புதிய தொற்றாளர்கள்…