இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்

இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என சீனா பதில் அளித்துள்ளது.

லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.

இதுபற்றி வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கருத்து கேட்ட பாது, அவர் நேரடியாக பதில் அளிக்காமல், “பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்” என்று மட்டும் கூறினார். இதன்மூலம் டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது.

மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை சீனா மற்றும் இந்தியா பொதுவாக இயல்பானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது. சீனா மற்றும் இந்தியா சரியான எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களைக் கொண்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில் அளித்துள்ளது.

Related posts