எனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய் சசிகுமார்

தனது இயக்கத்தில் சரித்திர கதையில் விஜய் நடிக்க உள்ளதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அவரே அதில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்தார்.

அதன்பிறகு படங்கள் இயக்கவில்லை மற்றவர்கள் இயக்கத்தில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து சரித்திர கதையசம் உள்ள படமொன்றை இயக்க சில வருடங்களுக்கு முன்பே சசிகுமார் முயற்சி செய்தார்.

ஆனால் சில காரணங்களால் பட வேலைகள் தொடங்கவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் இணைய தள நேரலை பேட்டியொன்றில் விஜய்யை வைத்து சரித்திர படத்தை எடுப்பேன் என்று சசிகுமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“எனக்கு வரலாற்று காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. ஆனால் வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். அந்த கதையை விஜய்யை வைத்து படமாக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தார். ஆனால் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்துக்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த படத்தை விஜய்யும் நானும் சேர்ந்து எடுப்போம்“ என்று சசிகுமார் கூறினார்.

Related posts