இந்தியா முழுவதும் நாளை முதல் விமான சேவை

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களை பதிவிட வேண்டும். தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts