உருவாகும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’

'விண்ணைத்தாண்டி வருவாயா 2' உருவாது தொடர்பாக கெளதம் மேனனுக்கு உறுதியளித்துள்ளார் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பால், இதன் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துள்ளார் கெளதம் மேனன். ஆனால், வெவ்வேறு படங்கள் உருவாக்கத்தில் இருந்ததால் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தை தொடாமல் இருந்தார். கரோனா ஊரடங்கில் அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து குறும்படமாக உருவாக்கியுள்ளார் கெளதம் மேனன். சிம்பு மற்றும் த்ரிஷா இருவரது வீட்டிற்கும் மொபைல் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் கொடுத்து அனுப்பியுள்ளார். இருவருக்கு வாட்ஸ்-அப்பில் வசனங்களை அனுப்பிவிட்டு,…

வடிவேலுவை நாயகனாக்கியது ஏன்?

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’. ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம், காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது. அதோடு இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் இப்படத்தின் காட்சிகள் நினைவுகூரப்படுபவை. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘24ஆம் புலிகேசி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் படக்குழுவினருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளரான ஷங்கருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதால் வடிவேலுவின் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இப்படம் மீண்டும் தொடங்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘23ஆம் புலிகேசி’ திரைப்படம் பற்றி நடிகர் சிம்புதேவன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் ‘23-ம் புலிகேசி' படத்தில் வடிவேலுவை நாயகனாக்கியது ஏன் என்பது…

மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

மனைவியினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) மாலை, பல்லம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமடு, ஆடிகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையிலான குடும்பத் தகராறு நீண்டுகொண்டு சென்றதன் காரணமாக, ஒரு கட்டத்தில் மனைவி, கணவனை பொல்லினால் தாக்கி இக்கொலை புரியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். பெரியமடு, ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை இன்று (17) ஆனமடுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக தமிழ் இளையோர் ஒன்றியம் விடுத்திருக்கும் மே 17 அறிக்கை !

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே ! இன்று மே 17 நினைவு நாள். தமிழர்களின் நீண்ட பெரும் ஆயுதப்போராட்டத்தின் உயிர்நாடி விதையாகிய நினைவுநாள். தமிழர்கள் ஆட்சி, அதிகாரங்களுடன் இறையாண்மை செய்யப்பட்ட நிலம் பறிக்கப்பட்டு எம் இனம் ஒன்றாக கொண்று குவிக்கப்பட்ட இறுதிநாள். தமிழீழ தனியரசின் கட்டுமானங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்துறைசார்ந்த அமைப்புக்கள், முப்படைகள்கொண்ட மரபுவழி இராணுவ சமநிலைகள்யாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நாள். ஆகவேதான் ஆயுதமௌனிப்பு பெற்றதாகவும் இன்நாள் அமைகிறது. எனவே மே 17க்கு ஒற்றைச்சொல்லில் தமிழ் அகராதியில் பொருள்தேட முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாய் தெரிந்ததில் அறிய முடிகிறது. அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ளுங்கள் என்ற செய்தி அத்திவாரமிடப்பட்டிருக்கின்றது. ஆகவே எமது அன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய தமிழ் பேசும் எம் சொந்தங்களே! சர்வதேசமயப்படுத்தப்பட்ட இப்போராட்டத்தை தமிழ் பேசும் மக்களும், இளையதலைமுறையும் இணைந்து தொடர்ந்தும் இப்போராட்டத்தை முன்னெடுப்பீர்கள் என்ற…