அலைகள் வாராந்த பழமொழிகள் 09.05.2020

01. உங்கள் சிந்தனைதான் உங்களை உருவாக்குகிறது. நீங்கள் உற்சாகமாக உணர்ந்தால் மட்டுமே உங்களால் உற்சாகமாக இருக்க முடியும். 02. உங்கள் உற்சாகம் மற்றவரையும் தொற்றிக்கொள்ளும்.. அப்போதுதான் அவர்கள் உயர்ந்த தரத்தோடு செயற்படுவார். 03. நாம் நம்முடைய வேலையை குறைவாக மதிப்பிட்டால் நம்மோடு பணியாற்றுவோர் அதைவிட தாழ்வாக மதிப்பிடுவார். 04. உங்கள் வேலை குறித்து எப்போதும் நேர்மறையான கருத்தை வெளியிடுங்கள். நான் தகுதி வாய்ந்த ஆளா..? எனது செயல் என் கீழ் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி தருமா என்று உங்களை நீங்களே கேளுங்கள். 05. மற்றவருடன் பேசும் முன் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி எண்ணங்களை மனதில் நிறுத்திய பின் பேசுங்கள். உங்கள் உள்ளம் உங்கள் குரலில் தெரியும். 06. பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாக உங்கள் மனதில் ஓடியது என்ன.. உங்களை நீங்களே கேளுங்கள். அது…

கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? பட நிறுவனம் விளக்கம்

கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? என பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் இந்தியன். இதன் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காஜல் அகர்வால். பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை ஆரம்பித்ததில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படபிடிப்பை சில வாரங்கள் நிறுத்தினர். பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. ஓய்வு முடிந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியபோது கிரேன் விழுந்து படக்குழுவினர் 3 பேர் பலியான கோரவிபத்து நடந்தது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த விபத்தை தொடர்ந்து கமல்ஹாசனும் பட நிறுவனமும் வெளியிட்ட அறிக்கைகளில்…

‘துப்பாக்கி 2’ வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த சந்தோஷ் சிவன்

துப்பாக்கி 2' குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'துப்பாக்கி'. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைகிறது. 4-வது முறையாக இணையும் இந்தக் கூட்டணியின் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 'துப்பாக்கி 2' ஆக இருக்கலாம் என செய்திகள் வெளியாகின.…

துரோகத்தின் பின்னணி: இயக்குநர் வெற்றிமாறன்

தனது கதைக்களங்களில் இருக்கும் துரோகத்தின் பின்னணி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 'அசுரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் இந்திய அளவில் அறியப்படும் இயக்குநராக மாறியுள்ளார் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை' மற்றும் 'அசுரன்' என இதுவரை 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அனைத்துக் கதைக்களங்களிலுமே துரோகம் என்பது பிரதானமாக இருக்கும். இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது: "எனது அத்தனை திரைக்கதைகளிலும் துரோகம் என்ற விஷயம் இருப்பது தெரிந்து நான் ஆச்சரியப்பட்டேன். முதல் இரண்டு படங்களில் எனக்கு அது தெரியவில்லை. 'விசாரணை' படத்துக்குப் பிறகு அதை மீண்டும் பயன்படுத்தமாட்டேன் என்று நினைத்தேன். ரசிகர்களை சுவாரசியப்படுத்த துரோகத்தைக் காட்டுவது ஒரு கருவி என்று பார்க்கிறேன். ஒரு சில ஆதார உணர்வுகளை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.…

மனநோயாளிகள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள்

அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதால் குடிநோயிலிருந்து மீண்ட மனநோயாளிகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என்று மனநலத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கரோனா ஊரடங்கால் மார்ச் 25-ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், கடந்த 42 நாட்களாகத் திறக்கப்படவில்லை. ஆரம்பத்தில் மது குடிக்காததால் குடிக்கு அடிமையான குடிநோயாளிகள் மனநலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அபாயம் இருக்கிறது என்று அஞ்சப்பட்டது. ஆனால், குடிநோயாளிகள் ஊரடங்கு கட்டாயத்தால் மது குடிக்காமல் இருந்ததால் அவர்கள் அந்நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். கடந்த கால் நூற்றாண்டாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டநிலையில், கரோனா ஊரடங்கால் அது இயல்பாகவே சாத்தியமானது. அதனால், தொடர்ந்து இதுபோல் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள்…

மதுபான கடைகளில் மொய்ப்பது போல திரையரங்கும் வருவார்கள்..!

திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறித்து இயக்குநர் அனுபவ் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. கரோனா ஊரடங்கு முடிந்தால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனிடையே, திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் பழைய மாதிரி வருவார்களா என்று பல தயாரிப்பாளர்கள் பயத்துடன் இருக்கிறார்கள். இதனாலேயே பல்வேறு பிரம்மாண்டப் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களுடைய வெளியீட்டுத் தேதியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துவிட்டார்கள். இது தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுபவ் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். 'முல்க்', 'ஆர்டிகிள் 15', 'தப்பட்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ள அனுபவ் சின்ஹா தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "இந்தியாவில் திரையரங்க வியாபாரத்தில் எதுவும் மாறாது. எதுவும். இங்கு பிரம்மாண்டம்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 19

நித்திய வழியில் நடத்தல். (அமைதி தேடல்) சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகோபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். எந்த மனுசனும் தன்னைத்தானே சோதித்தறிந்து…. 1கொரி.11:28 கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் குறித்து விசேடமாக தியானிக்கும் போது தன்னைத்தானே சோதித்தறிந்து தற்பரிசோதனை செய்து கொள்வது விசுவாசி களுக்கு இயல்பானதாகும். விசுவாசிகளான எம் மத்தியில் இதனைக் குறித்து விளங்கிக் கொள்ள முடியாத ஓர் கேள்வி எழுந்துள்ளதை நாம் மறைக்க முடியாது. பாவத்தை அறிக்கையிட்டு வெற்றி வாழ்வு வாழ அழைக்கப்பட்ட எமக்கு, ஆண்டவர் ஏற்கனவே வெற்றியை சிலுவையில் அளித்தவிட்டார் என்பது சத்தியம், அதுவே நமது விசுவாசம். அப்படியிருக்க தற்பரிசோதனை செய்வது முக்கியமானதா? பாவத்தை உணர்ந்து அறிக்கையிடுவது வேறு. நம்மை நாமே தற்பரிசோதனை செய்வது வேறு. நம்மை நாமே வஞ்சிக்காமல் பாவ நிலைமைகளை அறிக்கையிட்டு மனந்திரும்பும் போது விடுதலை கிடைப்பது உண்மை. ஆனால் அத்துடன்…