கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் !

கொரோனா வைரஸ் பாதிப்பு:தமிழகத்தில் மொத்தமாக 711 கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பேசலாம் எனத்தெரிகிறது.

ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் அதிகபட்சமாகச் சென்னையில் 189 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அதேபோல் மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related posts