சமூக வலைதளத்தில் மீண்டும் களமிறங்கிய நடிகை சமந்தா!

நடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.

2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன். ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப் படம் ‘ஜானு’ என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போலவே தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து அசத்தினார். ஜானு திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்தநிலையில் நடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் உடன் படுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா இன்று வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

மேலும், அதற்கு கேப்ஷனாக நீண்ட தூக்கத்தில் இருந்து மீள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இத்தனை காலம் சமூக வலைதளத்தில் தலையை காட்டாமல் இருந்ததற்கு விடை அளிக்கும் விதமாக இதனை பதிவிட்டுள்ளார்.

Related posts