கன்னடப் பட ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி!

சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான தியாவை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காண்பித்து வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.

கே.எஸ். அசோகா இயக்கிய தியா படத்தை ரீமேக் செய்ய இதுவரை 60 தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார். அவர் பேட்டியளித்ததாவது:

தியா படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனைத்து மொழிகளுக்குமான ரீமேக் உரிமையை வாங்க ஓர் இயக்குநர் முன்வந்தார். அவருடன் பேசி வருகிறோம். தெலுங்கில் ரீமேக் செய்ய அதிக அழைப்புகள் வருகின்றன. தெலுங்கு பதிப்பின் டப்பிங் உரிமையை வாங்க அமெரிக்காவிலிருந்து ஒரு கோரிக்கை வந்தது. விரைவில் ரீமேக் உரிமைகள் குறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

Related posts