கொரோனா தொற்று: பிரபல இங்கிலாந்து நடிகை மரணம்

பிரபல இங்கிலாந்து நடிகை ஹிலாரி ஹீத், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரசின் பரவலை இங்கிலாந்தில் கட்டுப்படுத்த முடியாததால், நாள்தோறும் நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 980-யை எட்டியுள்ளதால், இதன் மூலம் இங்கிலாந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958-யை தொட்டுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூலில் பிறந்த நடிகை ஹிலாரி, 1968 ஆம் ஆண்டு வெளிவந்த மைக்கேல் ரீவ்ஸின் திகில் திரைப்படமான விட்ச்ஃபைண்டர் ஜெனரல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்.

ஆன் அவ்புலி பிக் அட்வென்ச்சர், நில் பை மவுத் ஆகிய படங்களுக்கு பைனான்சியராக இருந்த ஹிலாரி, தனது 74 வயதில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அலெக்ஸ் வில்லியம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts