ரஜினி, அமிதாப் நடித்த கரோனா விழிப்புணர்வு குறும்படம்

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 74,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா விழிப்புணர்வு பற்றிய குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஃபேமிலி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தில் கரோனா பற்றிய விழிப்புணர்வு அம்சங்கள் அடங்கியுள்ளன. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினி காந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் போன்றோர் நடித்துள்ளார்கள்.

ஊரடங்குக் காலத்தில் பாதுகாப்பாக இருப்பது, வீட்டிலிருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட கரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை இந்தக் குறும்படம் அளித்துள்ளது. சோனி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான இந்தக் குறும்படம் தற்போது யூடியூப் தளத்திலும் வெளியாகியுள்ளது.

Related posts