உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 13 – 14

தபசுகால சிந்தனை 4-5
தம்மை அர்ப்பணித்து நம்மை அன்புகூர்ந்த தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16.

இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் இக்காலத்தில், அலைகள் வாசக நேயர்களாகிய நாம் அனைவரும் அவைகளை அறிந்து கொள்வது மிகவும் நலமாக இருக்கும்.

இந்த வாரம் பத்திரிகையில் வாசித்த ஓர்செய்தி இந்த சிந்தனையை எழுத தூண்டியது. உடல்நிலை சரியில்லா கணவனை கவனித்துக் கொள்வதற்காக வயதான பெண் ஒருவர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நடந்து சென்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவத்தை நாமும் பத்திரிகையில் வாசித்து இருப்போம். பல வைத்தியர்கள் தாதிமார்கள் இன்று தமது உயிரைக் கொடுத்து சேவை செய்வதை நாம் காண்கிறோhம். ஆனால் நம் ஆண்டவரின் அன்பு அதைவிட அதிகம். இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் இக்காலத்தில், அலைகள் வாசக நேயர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் அந்த அபரிவிதமான அன்பை அறிந்து கொள்வது மிகவும் நலமாக இருக்கும்.

நம் ஆண்டவர்இயேசு தாம்வந்த நோக்கத்தை நிறைவேற்ற வேறுவழியில்லாததால் சிலுவை வழியை தெரிந்தெடுக்கவில்லை. மாறாக சிலுவை வழி ஒன்றே அவருக்கு வழியாயிற்று. நமது பரம தகப்பனோ தமது பிள்ளைகளைக் (நம்மை) காப்பாற்ற சிலுவையே ஓரே வழியென்று அதையே தெரிந்தெடுத்தார். தாம் படைத்த மக்கள் ஒருவரும் தவறிவிடக்கூடாது என்று, இழிவாக கருதப்பட்ட சிலுவையை நமது ஆண்டவர் தெரிந்தெடுத்தார். இன்றும் அந்த சிலுவையை நோக்குpப்பார்க்கும் போதும், அதன் மறைவில் மறைந்திருக்கும் தியாகத்தை நோக்கிப்பார்க்கும் போதும், இன்றும் கூட உன்னால் ஆறுதலைக் காணமுடியும்.

பெற்றோருக்கு கீழ்ப்படியமறுத்து, முரட்டாட்டமாக வாழ்ந்த பிள்ளையை அணைத்த அம்மா, ஒரு ஊசியை எடுத்து, நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் என்னை இவ்வாறு தான் வேதனைப்படுத்துகிறது பார் என்று சொல்லி தன்னுடைய கையை ஊசியினால் குத்தினாராம். இரத்தம் கையில் இருந்து மகளின் முகத்தில் பட்டபோது, அவள் தனது தாயை அணைத்துக் கொண்டு, நீங்கள் இவ்வளவாய் என்மேல் அன்பு வைத்திருக் கிறிர்களா என்று கேட்டபடி கதறி அழுதாளாம்.

இந்த தாயாரின் இரத்தம் அந்த பிள்ளையின் வாழ்க்கையை மாற்றியது. அதேபோல இயேசு சவுக்கினால் அடிக்கப்பட்டதையும், முள்முடி சூட்டப்பட்டு, சிலுவை சுமந்ததையும், இறுதியாக சிலுவையில் தொங்கி மரணத்தை ஏற்றுக் கொண்டதையும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இவைகள் எல்லாம் எனக்காக, என்னை விடுவிக்க என்று நீ நினைத்து சிந்திப்பாயானால், இப்போழுதே அதனால் வரும் விடுதலையை உன்னால் அறிய முடியும். அன்று சிந்தப்பட்ட நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் இன்றும் விடுதலையை தருகிறது என்பதை ஒரு போதும் மறவாதே.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிதாவாகிய தேவன் எமது முற்பிதாக்களுக்கு இட்ட வாக்கைக் காப்பாற்ற தமது பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்தில் இருந்து மீட்டார். இதை நாம் உபாகமம் 7:8 இல் காணலாம். கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும், கர்த்தர் பலத்தகையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு (அவர்மேல் விசுவாசம் வைத்து), அவரின் இரத்தத்தினால் நமது பாவங்களைக் கழுவி, பாவமன்னிப்பின் மூலம் பாவ அடிமைத்தனத்தில் இருந்து எம்மை மீட்டுக்கொள்கிறார்.

சங்கீதம் 146:5-9 மிக அழகாக இதனை விபரிக்கிறது. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் ப10மியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர். அவர் என்றென்றைக்கும் உண்மை யைக் காக்கிறவர்.

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார். கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார். மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் து}க்கி விடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார். அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்.

தேவஅன்பு என்பது ஓர்ஈவு. அந்தஈவை ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு வெளிப்படுத்து கிறார். உன்பாவங்களினால் என்னைச் (தேவனை) சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங் களினால் என்னை (தேவனை) வருத்தப்படுத்தினாய். நான், நானே உன் மீறுதல்களை என் (உனக்கு தேவனாக இருப்பதன்) நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன் (மன்னித்து – இல்லாமல் செய்கிறேன்). உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். அதிகாரம் 43:24-25.

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் அவன்மேல் மனதுருகுவார்@ நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் (தயவு உள்ளவர் – இரக்கம் உள்ளவர்). ஏசாயா 55:7.

தேவனால் கிடைக்கும் பாவ அடிமைத்தனத்தின் மன்னிப்பைப்குறித்து அறிந்து, தியானித்துக்கொள்ளும் நாட்கள் தான் இந்த நோன்பு நாட்கள் (தபசுகாலம் – பாஸ்கா காலம்) ஆகும். இந்த உண்மையை அறிந்து, வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழ என்னுடன் சேர்ந்து ஜெபத்தை அறிக்கையிடு.

இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள நல்ல பிதாவே, உம்முடைய இரக்கத்தையும், அதனால் நாம் அடையும் விடுதலையையும் குறித்து அலைகள் பத்திரிகையூடாக அறிய உதவியதற்காக நன்றி அப்பா. உமது இரக்கத்தின் மூலம் விடுதலைபெற்று, பாவமன்னிப்பின் சந்தோசத்தை என் வாழ்வில் பெற்று, உம்முடன் வாழ எனக்கு உதவி செய்து என்னையும் எனது குடும்பத்தையும் காத்துவழி நடத்தும்படியாக இயேசுவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்லபிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts