என் படத்தை கொன்னுட்டாங்க என்று சேரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி என்ற தரமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் டைரக்டு செய்து நடித்த ஆட்டோகிராப் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் சேரன் கதாநாயகனாக நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படம் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா ஆகியோர் நடித்து இருந்தனர். சாய் ராஜ்குமார் இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த வசூல் இல்லை.

ராஜாவுக்கு செக் படம் தற்போது இணைய தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன். நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். இதற்கு சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “அநியாயமாக கொன்னுட்டாங்கம்மா படத்தை. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன் படத்தில் வசனம் இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்ததை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா. அவர்கள் நல்லா இருப்பாங்கன்றீங்க. வயிறு எறியுதும்மா. சும்மா விடாது எங்களோட உழைப்பு” என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

Related posts