கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுமா, கோமாதா கோமியம்?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் சிறுநீர் (கோமியம்) மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது இந்தியாவில்… குறிப்பாக, இந்து மக்களிடையே அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே, பசு மாட்டின் கோமியத்தில் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கொல்லும் சக்தி மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாகவும் மருத்துவ ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் கோமியம் மற்றும் சானத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் கோமியம் மற்றும் சானத்தை பதப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் அகில பாரத இந்து மகாசபா இயக்கத்தின் சார்பில் பசுவின் கோமியத்தை பருகும் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் தலைவரான சக்ரபாணி மஹராஜ் என்பவர் கோமியம் அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் அரக்கனைப் போல் சித்தரிக்கப்பட்ட ஒரு பேனரின் முன்னர் ஒரு குழாய் வைத்த டிரம்-மில் வைக்கப்பட்டிருந்த பசுவின் கோமியத்தை சிலர் மண் குவளையில் பிடித்து பருகும் புகைப்படங்களும் சிலர் கொரோனா வைரஸ் அரக்கனின் மீது கோமியத்தை ஊற்றும் புகைப்படங்களும் அதிகமாக காணப்படுகிறது.

பசு மாட்டின் சிறு நீர் மேலும் நோய்களை உருவாக்கலாம் அல்லாது அதனால் நோய்களை மாற்ற முடியும் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

அப்படியிருந்தால் உலகம் அதை அங்கீகரித்திருக்கும்.

சமுதாயத்தை ஆதாரமற்ற வழியில் நடத்தும் மூடத்தனங்களை இந்திய அரசு தடுக்காமை பெரும் தவறாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. பிள்ளையார் பால் குடித்த கதை போன்ற கூத்துக்கள் இனி இந்தியாவில் அதிகம் அரங்கேறலாம்.

Related posts