கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பாடசாலைகள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் 3012 பேர் பலியாகியுள்ளனர்.

தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில், 107 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இத்தாலி அரசு கைகுலுக்குதல் , முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 3285 பேர் உயிரிழந்துள்ளதுடன் 95,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts