அலைகள் வாராந்த பழமொழிகள் 05.03.2020

01. உள்ளத்தின் தோற்றம் மட்டுமல்ல உங்கள் வெளித்தோற்றமும் முக்கியமானது. உங்களைப்பற்றிய நேர்மையான விடயங்களை பேசுங்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்டவர் போல உங்கள் தோற்றம் இருப்பதை உறுதி செய்யுங்கள் இவை இரண்டும் மிக முக்கியம். 02. ஒரு மோசமான சிறுவனை அவனுடைய தோற்றத்தை வைத்து கண்டு பிடித்துவிடலாம் என்று ஒரு காவல் துறை அதிகாரி கூறுகிறார். 03. இளைஞர்கள் அவர்களுடைய புறத்தோற்றத்தை வைத்தே எடை போடப்படுகின்றனர். அவ்வாறு ஒருவனுக்கு முத்திரை குத்தப்படுமானால் பின்பு அதை மாற்றுவது கடினம். 04. உங்கள் தோற்றம் சீராகவும் நேர்த்தியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க அது மிக அவசியம். 05. நீங்கள் பரீட்சை எழுத போகும்போது சீராகவும் நேர்த்தியாகவும் உடையணிந்து போக வேண்டும். ஏனென்றால் சீராக சிந்திப்பதற்கு அது அவசியமாகும். 06. உங்கள் புறத்தோற்றம் உங்கள்…

கொரோனாவால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து?

தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர். இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் குடும்பப் பாங்கான கதையம்சத்தில் தயாராகிறது. ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிக்கிறார் என்றும், மனைவிகளாக குஷ்புவும், மீனாவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும், நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த…

நடிகர் விஜயின் எனர்ஜி வியக்கும் ஹிர்த்திக் ரோஷன்..!

நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன என வியந்து உள்ளார் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் சென்னை வந்தார்.ஹிர்த்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ஹிர்த்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

எனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் – ரஜினிகாந்த்

எனக்கு திருப்தி இல்லை ஏமாற்றம் தான் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்தார். சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ம இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது .2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம்…

அமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி…

கொரோனா வைரஸ் : தப்பிக்க எளிய வழிமுறைகள்

* அடிக்கடி, சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும். * பல்வேறு இடங்களுக்குச் செல்வோர், அடிக்கடி கண்கள், மூக்கு, வாயை தொடக் கூடாது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 முறை குளிக்க வேண்டும். * தொடர் சளி, இருமல் என்றால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். தொடர் காய்ச்சல் இருந்தால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக டாக்டரை பாருங்கள். * நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை குறைந்தபட்ச இடைவெளிவிட்டு நின்று பேசுங்கள். தும்மும் போதும், இருமும் போதும், கர்சீப் அல்லது டிசியூ பேப்பர் பயன்படுத்த வேண்டும். சானிடைசர் இருந்தால் அதை பயன்படுத்தி, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தலாம். * சர்ஜிக்கல் மாஸ்க், கொரானா போன்ற நுண் கிருமிகளை தடுக்க இயலாது என்கிறது மருத்துவ உலகம். எனவே,…

ரணில் – சஜித் மோதல் உக்கிரம்

ஐ.தே.க தலைவர் ரணில் தரப்பிற்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பிற்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.இந்த நிலையில் நேற்று கூடிய ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவும் வேட்புமனுத்தாக்கலுக்கென குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பையும் இணைத்துச் செயற்படும் வகையில் கட்சி செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு, தான் தயாராக இருந்த போதும் சஜித் பிரேமதாச தரப்பு நேற்றைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் கீழ் பெரும்பாலான முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கவும் அகில விராஜ் காரியவசமுமே. கட்சி சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதாக சஜித் தரப்பை சேர்ந்த சுஜீவ சேனசிங்க நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். செயற் குழுவில் எடுக்கும் முடிவுகளை…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பாடசாலைகள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் 3012 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில், 107 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இத்தாலி அரசு கைகுலுக்குதல் , முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 3285 பேர்…