இன்று 04.03.2020 சிறிலங்காவில் இடம் பெற்ற முக்கிய செய்திகள்..!

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

இப் பயிற்சியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக 4வது துரித தாக்குதல் ரோந்து படகு படையின் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக விஜேவர்தன கலந்துகொண்டுள்ளதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் மற்றும் சிறப்பு படகுப் படை பிரிவின் 35 வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும், நான்கு வார பயிற்சி காலத்தில் மனித உரிமைகள், நில தற்காப்பு சட்டம், தந்திரோபாய பாதுகாப்பு கட்டளை பாதுகாப்பு, இலக்கு படப்பிடிப்பு, சட்டவிரோத கடல் வழங்கல் கோடுகள், இராணுவ முடிவெடுப்பது, தொழில்முறை திறன் மேம்பாடு ஆகிய பாடங்கள் மற்றும் செயல்பாட்டு துறைகளில் அமெரிக்க இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது அது தூண்ட பரிமாற்றம் அறிவு பலப்படுத்தியது.

—–

கட்சியின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொதுமக்கள் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த 5 வருடக் காலப்பகுதியினுள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

——-

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பணம் குறித்தும் மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கு அமைவாக வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் பொறுப்பேற்கப்படவுள்ளது. பொது தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

——

பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், முழுமையான அதிகாரங்களைத் தாம் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வர்த்தமானி வெளியான தினத்திற்குப் பின்னர் எந்தவிதமான நியமனங்கள், இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.

அவ்வாறு நியமனங்கள், இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்த விதத்திலும் மத வழிபாட்டுத் தலங்களைத் தமது தேர்தல் பரப்புரைக்கான களமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கட்சியையோ, வேட்பாளர்களையோ மையப்படுத்திய எந்தவொரு நிகழ்ச்சியையும் மத வழிபாட்டுத் தலங்களில் நடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

அதேநேரம், வாக்காளர்களுக்குச் சன்மானம் வழங்குவது, நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்தார். தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்கென வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை தரவிருப்பதாகக் கூறிய அவர், உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள் வழமைபோன்று தமது பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் கூறினார்.

தேர்தல் பணிகளை முறையாகவும் செயற்திறன் மிக்கதாகவும் மேற்கொள்வது தொடர்பில் நாளைய தினம் (05) தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரை கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடுவதற்கும் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கைமேற்கொண்டுள்ளார்.

அதேசமயம், இன்று புதன்கிழமை (04) முற்பகல் 11 மணிக்கு ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்துவதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கடந்த எட்டாந்திகதி நள்ளிரவிலிருந்து கலைக்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து சகல அதிகாரத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் விதிமுறைகளை மிக இறுக்கமாகப் பேணுவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், நேற்றுக் காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர், மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்.

மதத் தலங்களில் தேர்தல் பரப்புரைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இதுபற்றித் தெளிவுபடுத்த நடவடிக்கைஎடுத்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், தேர்தலை நேர்மையாகவும் நீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் இதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதிக்குக் கடித மூலம் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

——-

பாராளுமன்றம் கலை க்கப்பட்டதையடுத்து எட்டாவது பாராளுமன்றச் செயற்பாடுகள் முடிவுக்கு வந்திருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தனது இறுதி ஊடகச் சந்திப்பை நேற்றுக்காலை நடத்திய அவர், கடந்த மூன்று மாத காலப் பகுதியில் தன்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு ஊடகத்துறையினரின் ஒத்துழைப்பையும் பாராட்டினார். சில ஊடகங்கள் தனது விடயத்தில் செயற்பட்ட விதம் குறித்தும் கவலையை வெளிப்படுத்தினார்.

தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை எதிர்க்கட்சித் தலைவருக்குரிய 27 (2) ஷரத்தின் கீழ் எழுப்பிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரியமுறையில் செவிசாய்க்கத் தவறியதாகவும், முக்கியமான இரண்டு சந்தர்ப்பங்களில் தனது உரைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், ஒலிவாங்கியை செயலிழக்கச் செய்ததோடு உரை நிகழ்த்தும் போது தொலைக்காட்சியை முடக்கி எனது உரை ஒளிபரப்புவதையும் முடக்கியதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதகாலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள், வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம், சுற்றாடல் வன பரிபாலன பிரச்சினைகள், பெண்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், புதிய கொரோனா வைரஸ் தொடர்பான விடயங்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எரிபொருள் விலைகள் தொடர்பாக, பெண்கள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு போன்ற முக்கியமான பலவிடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் உள்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு படகுகள், மீன் பிடிக்கப்பல்கள் கடற்றொழிலாளர்களுக்கு வாய்ப்பளித்து சுமார் 2இலட்சம் மீனவர்களை நடுத் தெருவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். IMUL என்று அனுமதி இலக்கத்துடன் கூடிய வெளிநாட்டு மீன் பிடிக்கப்பல்களுக்கு அனுமதி வழங்கி 40ஆயிரம் உள்நாட்டு மீனவர்களை முடக்கியுள்ளனர். ஆறாயிரம் மீன்பிடி படகுகள் சேவையிலீடுபடவில்லை. டிக்கோவிட்ட மீன் பிடித்துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை படிப்படியாக அனைத்து கடற்பிரதேசங்களிலும் உள்ள மீன் பிடித்துறைமுகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts