தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப்- மெலனியா டிரம்ப்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு, தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆக்ரா வந்தார்.

ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த டிரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா டிரம்ப் உள்ளிட்டோரை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு இசை இசைத்து, நடனமாடி டிரம்பை வரவேற்றனர்.

பின்னர் டிரம்பும், மெலானியாவும் தாஜ்மகாலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள வருகைப்பதிவு புத்தகத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார். தாஜ்மகால் முன்பு டிரம்ப் தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தாஜ்மகாலின் சிறப்புகளை டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு வழிகாட்டி விளக்கினார். டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர்.

Related posts