தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு

தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா,நயன் தாரா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Related posts