தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு

தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா,நயன் தாரா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

அதிக செலவு வைத்த மிஷ்கின் விஷால் படத்தில் இருந்து நீக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து திரைக்கு வந்த துப்பறிவாளன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் விஷால் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கினார். கவுதமி, பிரசன்னா, ரகுமான் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். இதற்காக 40-க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் விஷால் லண்டனில் முகாமிட்டார். அங்கு படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 2 நாட்கள் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் வாக்குவாதமும் மோதலும் உருவானது. இதையடுத்து ஒரு வார படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு விஷால் சென்னை திரும்பி விட்டார்.…

தலைவி படம் வெற்றி பெறும் ஆடுகளமல்ல.. போக போகவே புரியும்..!

ஜெயலலிதா வாழ்வை படமாக்குவது கடினம்.. அவருடைய நல்ல பக்கங்களை மட்டும் சொன்னாலும் பிரச்சனை வரும் தீய பக்கங்களை சொன்னாலும் சிக்கல்.. உண்மையை சொன்னால் அதிமுக ஆர்பாட்டம் செய்யும்..! பொய்கை சொன்னால் திமுக ஆர்பாட்டம் செய்யும்.. நேர்மையான சொன்னால் யாருமே ஏற்க மாட்டார்.. படம் எடுக்கும் போது பரபரப்பாக இருக்கும்.. ஓடும் போதுதான் பூதம் வரும்.. ஜெ மரணம் மர்மமானது.. அவருடைய ஊழல் இமயம் போன்றது.. என்ன செய்யப்போகிறது படக்குழு பார்க்கலாம்.. வெற்றி பெறும் ஆடுகளமல்ல இது..! ----- ‘தலைவி’ ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்குகின்றனர். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ்…

டிரம்ப் வந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் சிறப்பம்சங்கள்

ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வந்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் சிற்ப்பம்சங்கள் வருமாறு:- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் போயிங் 747-200 பி என்ற ஏர் ஃபோர்ஸ் ஒன் என்று அழைக்கப்படும் தனி விமானம் மூலம் இந்தியா வந்தனர். இந்த விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன அதனை பார்க்கலாம் * இந்த விமானம் “யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா,” அமெரிக்கக் கொடி, மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதியின் முத்திரை ஆகியவற்றுடன் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும். * ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட விமானத்திற்கு வழங்கப்படவில்லை, மாறாக இது அமெரிக்க ஜனாதிபதி ஒரு பயணியாக இருக்கும் எந்தவொரு நிலையான பிரிவு விமானத்திற்கும் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும் என வெள்ளை மாளிகை இணையதளம் தெரிவிக்கிறது…

தாஜ்மகாலை சுற்றிப்பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப்- மெலனியா டிரம்ப்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு, தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆக்ரா வந்தார். ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த டிரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா டிரம்ப் உள்ளிட்டோரை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு இசை இசைத்து, நடனமாடி டிரம்பை வரவேற்றனர். பின்னர் டிரம்பும், மெலானியாவும் தாஜ்மகாலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள வருகைப்பதிவு புத்தகத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார். தாஜ்மகால் முன்பு டிரம்ப் தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். தாஜ்மகாலின் சிறப்புகளை டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு வழிகாட்டி விளக்கினார். டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர்.

பிரதமர் மோடி கடுமையானவர் ; அமெரிக்க அதிபர் டிரம்ப்

வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 36 மணி நேர சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் தனது பேச்சின் நடுவே, இந்திய பிரதமர் மிகப்பெரும் தலைவர் அனைவருக்கும் அவரை பிடிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு அவர் மிகவும் கடுமையானவர் என்று குறிப்பிட்டார். டிரம்ப் குறிப்பிடுகையில், “ இந்தியா - அமெரிக்கா இடையே மிகவும் விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். இந்த ஒப்பந்தம்…

இந்தியா எங்களது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது

36 மணிநேர பயணமாக இன்று இந்தியா அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தினார். இந்தியா - அமெரிக்காவுக்கு இடையேயான பொருளாதாரம், இராணுவம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சில எதிர்பார்க்காத விடயங்கள் குறித்து உரையாற்றினார். அவற்றில் சில விடயங்கள் பின்வருமாறு, அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது, மதிக்கிறது என்பதை கூறுவதற்காக நானும் எனது மனைவியும் 8,000 கிலோ மீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளோம். இந்த குறிப்பிடத்தக்க விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். இந்தியா எங்களது இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி ´டீ வாலாக´ வாழ்க்கையை தொடங்கினார், அவர் தேனீர் விற்பனையாளராக…

நல்லிணக்கம் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை விலகுவதாக கூறியது..!

40/1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் எலிசபெத் டிச்சி -பிஸ்ல்பெர்கருக்கு விளக்கினார். கடந்த புதன் கிழமை (17) இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் பற்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரினால் ஐ நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக ஐ.நாவிலுள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி நேற்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நாவிலுள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைத் தலைவரை சந்தித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை (24) ஆரம்பமாகவிருக்கும்…

ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் சுமந்திரன் !

ஐ.நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நேற்று (23) எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு நேற்று மாலை 6.30 மணி அளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசு ஐ.நா தீர்மானங்களிலிருந்து வெளியுறுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…