மாஃபியா தமிழக விமர்சனம் இப்படியுள்ளது..

தமிழகத்துக்கே போதை மருந்து சப்ளை செய்யும் மிகப்பெரிய கும்பலின் தலைவனை, 3 பேர் மட்டுமே சேர்ந்து பிடிக்க முயற்சி செய்வதுதான் ‘மாஃபியா’. போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் அருண் விஜய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பதால், அதை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். அவருக்குத் துணையாக, அவருடைய குழுவில் ப்ரியா பவானிசங்கர், பாலா ஹாசன் ஆகிய இருவரும் உள்ளனர். அவர்களால் போதை மருந்து கடத்தல் தொடர்பாகக் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆட்களைப் பிடிக்க முடிந்ததே தவிர, அதற்கு மேலுள்ள ஆட்களை நெருங்க முடியவில்லை. அந்தக் கும்பலின் தலைவன் யார் என்ற சின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் யார் என தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பற்றிய கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை…

இந்தியாவில் மதச் சுதந்திர விவகாரம்; மோடியிடம் ட்ரம்ப் பேசுவார்

இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திர நிலவரம், அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் இந்தியா வரும்போது பிரதமர் மோடியிடம் ஆலோசிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24, 25-ம் தேதிகளில் இருநாட்கள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கும் அதிபர் ட்ரம்ப் அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க குஜராத் அரசும், மத்திய அரசும் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இந்நிலையில், சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின், மதச் சுதந்திரம் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி…

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், 44 வயதான ஷில்பா ஷெட்டி, 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையை வரவேற்று பதிவு எழுதியுள்ளார். பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமீஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வாடகைத் தாய் முறை மூலம் இந்தக் குழந்தை…

சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்

நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் திரைக்கு வந்து பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன். கண்டிப்பாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்தான் இருப்பேன். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு. வைர நகைகள் மிகவும் பிடிக்கும். அதை அணியும்போது அழகாக இருக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள். எனக்கு பிடித்த சுற்றுலா தளம் புளோரிடாவில் இருக்கும் மியாமி. அமெரிக்க வெப் தொடர்கள் அதிகம் பார்ப்பேன். நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும். நகைச்சுவை இருந்தால்தான் சிரித்து சந்தோஷமாக இருக்க…

சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க இந்தியா..!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2236 லிருந்து 2345 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75, 465 லிருந்து 76,288 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா கூறியதாவது:- கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள்…

ரஜினி நீங்கள் யார்? என கேட்டவர் பைக் திருட்டு வழக்கில் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார். இவர் தனது எமஹா ஆர்.ஒன் 5 என்ற பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை தூத்துக்குடியை சேர்ந்த சரவணன், விஜி என்ற இரண்டு திருடர்கள் திருடி அந்த வாகனம் விற்பனைக்கு இருப்பதாக ஒஎல்எக்ஸில் விளம்பரம் வெளியிட்டு இருந்தனர். இந்த விளம்பரத்தை பார்த்த சந்தோஷ் என்பவரும் அவரது நண்பர் மணி ஆகிய இருவரும் ஓ.எல்.எக்ஸ் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த பைக்கை, திருட்டு பைக் எனத் தெரிந்து ஆர்.சி புக் இல்லாமல் வெறும் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர் (சந்தோஷ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நீங்கள் யார்? என்று…

நல்லாட்சி அரசாங்கம் 1500பில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது

நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம் கடனாகக் கொண்டிருந்தது. எனினும் கடந்த நான்கரை வருடங்களில் 500பில்லியனை அந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மஹாபொல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி, நிதியமைச்சு, மின்சார சபை என அனைத்துத் துறைகளிலும் கொமிசன் பெற்றுக்கொண்டதை காணமுடிகிறது எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விமான கொள்வனவு மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் காப்புறுதி, மாணவர்களுக்கு மடிக் கணனி வழங்குதல், நிதியமைச்சு மூலம் மதுபான அனுமதி வழங்கியமை, மின்சார கொள்வனவு என அனைத்திலும் கொமிசன்…

யாழ். பல்கலையில் உலக திருக்குறள் மாநாடு ஆரம்பம்

இரண்டாவது உலகத் திருக்குறள் மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ்த் தாய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இதய நிறைவு தியான அமைப்பு, ஸ்ரீராமச்சந்திர மிஷன்ஆகியன இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒத்துழைப்புடன் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் கி.விசாகரூபன் தலைமையில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. மாநாடு இடம்பெறும் கலையரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைகளுக்கு யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி போராசிரியர் க.கந்தசாமி மற்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் ஆகியரோர்…