இன்று 21.02.2020 வெள்ளி இலங்கையின் முக்கிய செய்திகள்

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரியின் கையடயக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

இதற்கமைய விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்த பின்னர் திணைக்கள வளாகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக நாளொன்றுக்கு 1,500 பேருக்கும் அதிகமானோர் கொழும்பு அலுவலகத்திற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

——–

திருகோணமலை, பத்தினிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, ஜாவா வீதி, பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம் போட்டாறு, பத்தினிபுரம் பகுதியில் மாட்டுப்பட்டி வைத்திருக்கின்ற நிலையில் நேற்றிரவு மூவர் கூட்டாக இணைந்து மது அருந்தியதும் அதனை அடுத்து இருவரும் வரும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தடியால் தாக்கியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த நபரிடம் கத்தியொன்று கையில் காணப்பட்டதால் அதே கத்தியை எடுத்து கையில் வைத்ததாகவும் அவரின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முள்ளிப்பொத்தானை, 10ஆம் கொலனியைச் சேர்ந்த முகம்மட் ரவூப் றிபாஸ் (36) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை சட்ட வைத்திய நிபுணர் மற்றும் கந்தளாய் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

——–

இன்று (21) காலை கொக்கிளாய் – முல்லைத்தீவு வீதியில் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த இராணுவத்தினர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்கு எவரையும் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

——–

Related posts