தேர்தல் முடிய இந்திய கடன் மக்கள் முதுகில் விழப்போகிறது செய்தியை படியுங்கள்.

கடன் தவணையை செலுத்தவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகும். இதுதொடர்பாக ஐக்கிய தே கட்சியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானதாகும் என தகவல் மற்றும் தொடர்பா தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் அவிருத்தி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்கங்களும் வெளிநாடு இருந்து கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது நாட்டின் மொத்த கடன் தொகை கடந்த 2005 ஆம் ஆண்டு 2 ஆயிரத்தி 200 பில்லியன இருந்தது. அது கடந்த 2014 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்தி 400 மில்லியனாக
அதிகரித்திருந்தது.

இது கந்து வட்டி, கடப்பார வட்டி போல இருக்கிறது..

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 9 வருட காலத்தில் 5 ஆயிரம் 200 பில்லியன் ரூபா கடன் பெற்றிருந்தது. ஆனால் 2014 இல் இருந்து 2019 ஆம் ஆண்டாகும் போது மொத்த கடன் தொகை 14 ஆயிரம் பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த அரசாங்கம் 5வருடத்தில் 6ஆயிரத்தில்
பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுள்ளது

அதன் பிரகாரம் இந்த வருடம் 480 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் தவணைகள்செலுத்த இருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமையில் கடன் தவணை செலுத்த நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அதன் பாதிப்பு நாட்டு மக்களுக்கே ஏற்படுகிறது. அதனால் பொறுப்பவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நன்மை கருதி, இந்தியாவுக்கு செலுத்தவேண்டிய கடன் தவணையை மேலும் 3வருடங்கள் காலம் தரு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய விஜயத்தின்போது, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ( கடனை கட்டி முடிப்பதா? அதை பின்போடுவதா? பொறுப்பு வாய்ந்த அரசாங்கம்? என்று கேட்க ஆளில்லாத நிலை.)

இது குறித்து ஐ.தே.க கூறியது இதுதான்..:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் சர்வதேச கடன்களை மீள செலுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரோந்திர மோடியிடம் விடுத்த வேண்டுகோள், அவரது விஜயம்குறித்து இலங்கை சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்போது தன்னுடன் மேலும் பலரை அழைத்துச் சென்றிருந்தார். இந்தியாவிற்கு சென்று யாத்திரைகளிலும் ஈடுப்பட்டார். மஹிந்தவின் இவ்வாறான செயற்பாட்டின்கா ரணமாக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளன நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இவ்வாறான விஜயம்அ வசியமானதா?

இதேவேளை இலங்கையின் சர்வதேச கடன்களை செலுத்துவதற்காக தமக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவே அவர் அங்கு
சென்றுள்ளார். இது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. எமது வீட்டிலுள்ள பிரச்சினைகளை அயல் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும் என்ற மனோபாவத்தை கொண்டுள்ள எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் , மஹிந்தவின் செயற்பாட்டால் நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related posts