ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவில் முன்னாள் கடற்படை தளபதி !

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீள்ட் வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 10 திகதி ஆஜராகவுள்ளார்.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் கடற்படை கொமாண்டர் ஆர்.பி.எஸ்.ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் எச்.எம்.பி.சி ஹெட்டியராச்சி ஆகியோரும் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிசங்க சில்வா ஆகியோர் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தாக்கல் செய்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

Related posts