என்னால் ஒரே மாதிரி பாடல் கொடுக்க முடியாது -இளையராஜா

குறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது என்று இளையராஜா கூறினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:- இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும்? சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும். குறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால்…

ரகசிய திருமணம் நடந்தது ஏன்? யோகிபாபு விளக்கம்

ரகசிய திருமணம் நடந்தது ஏன்? என்பது குறித்து நடிகர் யோகிபாபு விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மஞ்சு பார்கவி என்பவரை ஆரணி வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. பத்து பதினைந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பெண் வீட்டார் தரப்பில் யாரும் வரவில்லை என்றும் தகவல் பரவியது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைக்கவில்லை. திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலையும் டுவிட்டரில் யோகிபாபு மறுத்தார். திருமணம் முடிந்ததும் அதை ஏன் மறைத்தார்? பட உலகினரை திருமணத்துக்கு எதற்காக அழைக்கவில்லை என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ரகசிய திருமணம் நடந்தது ஏன்? என்பது குறித்து யோகிபாபு விளக்கம்…

பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்று தற்கொலை ?

டெல்லியில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு, ஆண் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ப்ரீத்தி அகலாவத் ( வயது 26) நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை இன்னொரு சப்- இன்ஸ்பெக்டரான தீபான்சு ரதி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் அருகே காரில் தீபான்சு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். தீபான்சு ரதி சோனிபட்டைச் சேர்ந்தவர், ரோஹினியில் ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய டெல்லி போலீசார் கொலை மற்றும்…

தமிழ் சினிமா பெரிய பிரச்சினை நோக்கி ஆர்.கே.செல்வமணி

தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உருவானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்தப் போராட்டம் தொடர்பாக பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த மாதிரியான போராட்டத்தால் திரைப்படத் துறையில் பெரிய அளவில் பிரச்சினை வரவிருப்பதாகத் தெரிகிறது. இது போன்ற போராட்டத்தை பெஃப்சி அமைப்பு கண்டிக்கிறது. இந்த…

இ.போ.சபை பஸ்களில் தினமும் ஒரு கோடி ரூபா மோசடி!

இ.போ.ச. பஸ்களில் கட்டண டிக்கட் மோசடி காரணமாக தினசரி ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். நாட்டில் 107 பஸ் டிப்போக்கள் காணப்படுகின்றன. அனைத்து டிப்போக்களிலும் இந்த கட்டண மோசடி இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்து சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத் தகவல்களை அவர் வெளியிட்டார். மேலும் கூறுகையில், அடுத்த ஆறு மாதங்களுக்கிடையில் சகல மோசடிகளையும் தடுத்து இதனால் ஏற்படக்கூடிய இழப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ.போ.சபை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கப்படும். சேவையிலீடுபடும் பஸ்களை சோதனையிடுவதற்கான திடீர் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சோதனைக் குழுக்களுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு குழுவாகவே இது அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் குழு இரு தினங்களுக்கு முன்னர் கம்பஹா டிப்போவுக்குச் சொந்தமான பஸ்வண்டியை கடவத்தையில்…

ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவில் முன்னாள் கடற்படை தளபதி !

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீள்ட் வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 10 திகதி ஆஜராகவுள்ளார். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல் கடற்படை கொமாண்டர் ஆர்.பி.எஸ்.ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் எச்.எம்.பி.சி ஹெட்டியராச்சி ஆகியோரும் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிசங்க சில்வா ஆகியோர் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தாக்கல் செய்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய ’07 மாடிக் கட்டிடம்’

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் புதிய ´07 மாடிக் கட்டிடம்´ இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆனந்தா கல்லூரி உருவாக்கிய முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தனது பாடசாலை பருவத்தின் நடைமுறைகளுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி முதலில் அங்குள்ள விகாரைக்குச் சென்று வழிபட்டார். கல்லூரியின் சாரணர் பிரிவின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. தாய் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தைச் சேர்ந்த ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களை நினைவுகூர்ந்து ஜனாதிபதி , இராணுவ தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். கல்லூரியின் பழைய ஆசிரியர்களை நினைவுகூர்ந்து ஹென்ரி ஸ்டீல் ஓல்கொட் அவர்களின் உருவச் சிலைக்கும் மலரஞ்சலி செலுத்தினார். இலங்கையின் பாடசாலையொன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள…