சற்று முன்னர் கிடைத்த இலங்கை மாலை நேர செய்திகள்.. 30.01.2020

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில். கூட்டணியின் தலைவர் சஜித்- செயற்குழு ஒப்புதல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதற்கு கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று மாலை ஸ்ரீகோத்தா கட்சி தலைமையகத்தில் கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிடுவதற்கும் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவல்களை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த செயற்குழு கூட்டத்தை சஜித் பிரேமதாச உட்பட்ட 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்தே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ------- இலங்கையில் காணாமல் போதல் விடயங்களில் குறைவு காணப்பட்டாலும் ஏனைய குற்றங்களில் பொறுப்புக்கூறல் இல்லை என்று…

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஹாலிவுட் படங்களில்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். தற்போது மீண்டும் 2 ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளன. பிரியங்கா சோப்ரா, மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் 1999-ல் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற அதிரடி சண்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இதைத்தொடர்ந்து மேட்ரிக்ஸ்-2 மற்றும் 3-ம் பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தின. தற்போது 4-ம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த கீனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் ஆகியோர் மேட்ரிக்ஸ்-4 படத்திலும் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மேட்ரிக்ஸ் 4-ம் பாகத்தை அடுத்த வருடம்…

புதிய படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா?

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டு விட்டனர். தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.…

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் டி.எஸ்.ராகவேந்திரா (75) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா உடல் நலகுறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக அறிமுகம் ஆனவர் டி.எஸ். ராகவேந்திரா. அதன்பின் சிந்து பைரவி, விக்ரம், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சொல்ல துடிக்குது மனசு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இசையமைப்பாளராகவும் இருந்து உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.எஸ்.ராகவேந்திரா இன்று மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்குகள் இன்று மதியம் கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் 142 கி.கி. கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ 995 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (29) இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிராந்திய மோட்டார் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 995 கிராம் ஆகும். இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் வீட்டின் அறை ஒன்றில் 68 பொதிகளைக் கொண்ட 04 பயணப்பொதிகளில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான…

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை!

இன்று (30) பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று (29) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று மாலை 3 மணியளவில் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாக கட்சி தகவல்கள்…

அரசியல் இலஞ்சம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில்

அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது. இது நாங்கள் சொல்லவில்லை அவர்கள் தான் சொல்கின்றார்கள். கடந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க 2 கோடி வழங்கப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார். தமிழ்த்…