படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது -ரஜினி

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி ‘மேன் வெர்சஸ் வைல்டு’. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். பியர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் நிகழ்ச்சி அமையும்.

இந்த பயணத்தில் ரஜினிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்றும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று கூறினார்.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் In to The Wild எனும் புதிய ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பியர் கிரில்ஸ் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். என்னது பாலிவுட் சூப்பர் ஸ்டாரா? என ரசிகர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என பியர் கிரில்ஸ் மாற்றினார்.

Related posts