‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்

பிகில் படத்துக்கு பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார். விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லி மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மாஸ்டர் கொரிய படத்தின் கதை என்று தகவல் கசிந்தது. படக்குழுவினர் மறுத்தனர். படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக வருகிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகிறது என்றும் தகவல்கள் பரவின. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது விஜய்யும், விஜய் சேதுபதியும் ரத்தம் தெறிக்க ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு மோதுவது போன்ற இன்னொரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.…

பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா?

பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், ஜெயராம், லால், ஐஸ்வர்யாராய், திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அவர் குந்தவையாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் பேசப்படுகிறது. ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை என்பதால் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. குந்தவைதான் வந்தியத்தேவனுக்கு ஜோடி. எனவே கார்த்திக்கு ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பொன்னியின் செல்வன்…

கடல் கன்னி உடையில் கலக்கிய பிரியங்கா சோப்ரா

கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கடல் கன்னி உடையில் பிரியங்கா சோப்ரா கணவருடன் ஒய்யாரமாக நடந்து வந்தார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடைபெற்றது. 15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் அணிவகுத்து வந்த பிரபலங்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். விழாவில் கடல் கன்னி உடையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாசுடன் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார். ட்ரூத் ஹர்ட்ஸ் எனும் பாடலுக்காக சிறந்த சோலோ…

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்… !!

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்டு. இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நிகழ்ச்சியான மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பேர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியின் பாதையில் ரஜினியும்…

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது..

போலி ஆவணங்கள் தயாரித்து தலைமன்னாரில் 280 ஏக்கர் காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரான றிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். சந்தேகநபர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை புறக்கணிக்கலாம் அல்லது எதிர்கால விசாரணைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தலாம் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து நீதவான் சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுத்தார். 280 ஏக்கர் காணி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது இது மிகவும் பாரதூரமான மோசடியென கடந்த 05 ஆம் திகதியன்று சுட்டிக்காட்டிய நீதவான், இக் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்ததுடன் றிப்கான் பதியுதீனின் கடவுச்சீட்டையும் தடை செய்தார். தலைமன்னார் உப்புத்தரவு, வெட்டித்தரவு காணிக்கு போலி உறுதியை தயாரித்து விற்பனை…